ச்சாக்கடைப் பேச்சாளனும் அவனது ரசிகர்களும் பெண்ணுரிமைப் போராளிகளும்

""சாக்கடைப் பேச்சாளனும் அவனது ரசிகர்களும் பெண்ணுரிமைப் போராளிகளும்!!""

கட்டுரை - எண்ணம்.
""சாக்கடைப் பேச்சாளனும் அவனது ரசிகன்களும் பெண்ணுரிமைப் போராளிகளும்"".

சில வாரங்களுக்கு முன், ஒரு அரசியல் கட்சியின், சிவாஜி என்ற ஒரு சாக்கடைப் பேச்சாளன் பொது மேடையில் சில பெண்கலைப் பற்றி மிகவும் அவமானகரமாகவும் கீழ்த்தரமாகவும் பேசினான். அந்தச் சமயத்தில் அவன் பேசிய மேடையில் இருந்த எல்லாத் தலைவர்களும் மற்ற பேச்சாளர்களும் அதை ரசித்து மகிழ்ந்தபடி இருந்தனர்.
இதைக் குறித்துத் தனது யூட்யூப் பக்கத்தில் ஒரு சகோதரி சற்று விரிவாக ஒரு போதனை செய்திருந்தார்
பெண்களுக்கும் பெண்ணுரிமைப் போராளிகளுக்கும். அவர் மிகவும் சுலபமாக ஒரு சராசரிச் சமூக உறுப்பினருடைய தார்மீகக் கடமையைக் கூட வேறு ஒருபக்கத்திற்குத் தோள்மாற்றி விட்டு, நீட்டி முழக்கிப் பெண்ணுரைமைப் பாடம் நடத்தினார்.

அதற்கு ஒரு பார்வையாளர், காமிராவின் முன் உட்கார்ந்து எதைப் பற்றியும் எவ்வளவிற்கு வேண்டுமானாலும் பேசித் தள்ளலாம் என்றும் நடைமுறையில் அந்தந்த இடத்தில் யாரும் நேருக்கு நேர் தட்டிக் கேட்பதில்லை என்றும் கண்டித்திருந்தார்.
அவைகளைப் படித்தபின் அந்தப் பெண்மணிக்கு நான் என் கருத்துக்களைப் பதிவு செய்தேன். ஊடகத்தில் ஒளிந்து கொண்டு ஊருக்கு உபதேசம் செய்யும் இந்த "நிழல் போராளிகள்" அந்தச் சாக்கடைப் பேச்சாளனுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை!
**********************************************************************************
உங்களுடைய புதிய முயற்சிக்குப் பாராட்டுக்களும் நன்றியும் தெரிவிக்கிறோம் சகோதரி!
அந்தக் கழிசடைப் பேச்சாளனின் வாயைப் பார்த்துக் கொண்டு "அப்படியே கல்லு மாதிரி" உட்கார்ந்திருக்கும் "கட்சிக்காரக் கூட்டம்", கூட்ட முடிவில் கிடைக்கவிருக்கும் "பரிசுப்பொதி"க் கனவில் கிரங்கிக் கிடக்கும்! அவர்கள் அவர்களுடைய தலீவரு ஆட்களைத் தட்டிக் கேட்கவே மாட்டார்கள்! அதற்கும் முன் அவர்களுக்கு மேடைமீது கத்திக் கொண்டிருக்கும் பிராணி எல்லாம் கண்னில் படாது! ஏனென்றால் கண்களில் "பிரியாணி-பீர்-பிட்சா-பேட்டா பரிசுப்பொதி" மின்னிக் கொண்டிருக்கும்!

https://youtu.be/N7tN4ch-1OY?t=90
அப்படிப் படுவதாக இருந்தால் அவர்கள் ஏன் அரசியல்வியாதிகள் தேர்தலின் போது அள்ளி வழங்கும் இலவசங்களைக் கேட்டு வாயைப் பிளந்து கொண்டு கண்ணை மூடிக் கொண்டு வாக்களிக்கிறார்கள்? அப்போதே, "இலவசம் வேண்டாம்" என்றும் "அரசின் நிதித்துறைக்கு இது ஆபத்தான யோசனை" என்றும் புரிந்துகொண்டு வாக்களித்திருக்கலாம் இல்லையா?

அவர்களைப் போய்த் "தட்டி எழுப்ப வேண்டும், அவர்களுக்கு "முறையான பயிற்சிகள்" (அதென்ன வகையான பயிற்சிகள்?) தந்து விழிப்புணர்ச்சி உண்டாக்க வேண்டும்; சமூகக் குற்றங்களைக்களைய அவர்களுக்குத் தைரியம் ஊட்டவேண்டும்" என்று நீங்கள் எழுதுவதும் காணொளி பதிப்பதும் எல்லாம் இன்னொரு வகையான பின்மேடைப்பேச்சு;
அதாவது, யூட்யூப் மேடைப் பேச்சு!

உங்கள் உரையின் நடுவில் எந்தத் தேவையும் இல்லாமல் நீங்கள் பெண்களுக்கு ஒரு சிறு உதவிக் குறிப்புத் தந்திருக்கிறீர்கள் இல்லையா? அது,

https://youtu.be/N7tN4ch-1OY?t=195
அருமையான யோசனை! ஆனால் சகிக்கவில்லை! உங்களுக்கே அதைச் சொல்ல அறுவறுப்பாக இல்லையா? அதைச் சொல்லும் உங்களுக்கு அந்தச் சாக்கடைப் பெச்சாளனைக் கண்டிக்க என்ன தார்மீக உரிமை இருக்கிறது?
பெண்ணுரிமையைப் போதிக்க அதுவா வழி? அதுவா முறை?
இப்படிச் சொன்னால், நீங்கள் உடனே பிடரியைச் சிலிர்த்துக் கொண்டு,
"வீட்டில் நாம் பெண்களைச் சிறுவயதில் இருந்தே "ஆணாதிக்கத்தின் அடிமைகளாக" வளர்க்கிறோம். அதுதான் ஆணிவேர்த் தவறு. அதனால்தால் அவர்கள் தங்களுக்கு எதிராக ஆண்கள் தரக்குறைவாகப் பேசுவதை எதிர்ப்பதில்லை" என்று பழைய பஞ்சாங்கத்தைப் புரட்டக் கூடாது!

ஒரு பெண்ணிற்குத் தேவையான எல்லா அடிப்படை நியாயங்களையும் தர்மங்களையும் அவளது வீட்டில் அவளது பெற்றோர் இன்றும் முறையாகச் சொல்லிக் கொடுத்துத்தான் வளர்க்கிறார்கள் என்பது உங்களுடைய போராளிக் கண்களுக்குத் தெரியவில்லை; தெரிய நியாயமும் இல்லை!! இப்படிச் சொல்லிச் சொல்லியே உங்கள் கூட்டம் பெண்களுக்கு மிக மிக முக்கியமான கூட்டுக் குடும்ப
மரபை ஒழித்துக் கட்டி விட்டீர்கள்!! வீட்டில் தாயிடமும் தந்தையிடமும் தாத்தன் பாட்டியிடமும் நல்லவற்றைக் கற்க வேண்டிய பெண், அதாவது செய்முறைகளால் கற்க வேண்டிய பெண், உங்களிடம் வந்து அவற்றையே, "பயிற்சிப் பட்டறை", "எழுச்சிப் பாடம்", "விழிப்புணர்ச்சிக் கல்வி" என்று அவற்றிற்கு மொய் அழுது கற்றுக் கொள்ள வேண்டும் இல்லையா? கூட்டுக் குடும்பம் இருந்தால் உங்களுக்குப் பிழைப்புக் கிடைக்காதில்லையா?

பெண்ணுரிமைப் போராளிகளும் பெண்ணிய வாதிகளும் அரசியல் கட்சிகளின் மகளிர் அணிகளும் மகளிர் முன்னேற்றத் தொண்டு நிறுவனங்களும் மகளிர் சட்ட உதவிக் குழுக்களும் போதாது என்று மகளிர் காவல் துறையும் இருக்கும் போது அவர்கள் இதையெல்லாம் தட்டிக் கேட்க முடியாதா என்ன? அவர்களுக்க அதுதானே வேலை? அவர்கள்

முதலில் அதை உருப்படியாகச் செய்தாலே போதும்!
ஒரு ஆண் பொது மேடையில் அரசியல் வியாதிகளின் ஆதரவுத் தைரியத்தில் பெண்ணை அவமதிக்கும் போது இவர்கள் அவன்மீது ஆளாளிற்கு வழக்கிற்கு மேல் வழக்கு என்று பதிவதில்லையே ஏன்!

ஆயிரம் சட்டங்களும் நீதிமன்றங்களும் இருக்கும் இந்தக் காலகட்டத்தில், பெண்களுக்கு என்ன மாதிரியான "விழிப்புணர்ச்சிக் கல்வி" யைத் தரப் போகிறீர்கள்? அதற்கு எத்தனம் ஆயிரம் பணம் பிடுங்கப் போகிறீர்கள்?
பெண்ணிற்குத் திருமணம் ஆனதும் அல்லது திருமண வயதை அடைந்ததும் அவளைச் சரிநிகராக மதிக்கும் தகப்பன்மாரும் சகோதரரும் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் இப்படி, நீங்கள் எல்லாரும் கூடி, "நாம் அலுவலகம் செல்லும் பெண்களுக்கும் வேலைக்கு வரும் பெண்களுக்கும் அவர்களுக்குத் தைரியத்தைப்புகட்டவேண்டும்" என்று பாடம் நடத்தவும் பயிற்சிப் பட்டறை நடத்தவும் புறப்படுவது, நமது, அதாவது, "படித்த, அரசியல் விபரங்களும் சட்ட உரிமைகளும் தெரிந்த, புதுமைப் பெண்கள்" ஆகிய நமது, சமுதாயப் பொறுப்புக்களைத் திசை திருப்பும் செயலாகும்.

என் வயது அறுபத்தாறு.இன்றுவரை, அதாவது எனது குழந்தைப் பருவம் முதல் இன்றுவரை,
தவறானதும் சமுதாய விரோதமானதும் சட்ட விரோதமானதும் தர்ம விரோதமானதும் ஆன எதுவானாலும் யாரால் செய்யப் பட்டாலும் அந்தக் கணத்திலேயே அந்த இடத்திலேயே எதிர்த்துத் திருத்த முயல்வது எனது இரத்தத்தில் ஊறிய பண்பு. வண்டிக்கு ஐந்து மில்லி பெட்ரோல் குறைவாக விழுந்தலும் கூட அங்கு தட்டிக் கேட்பேன்.எங்களுக்கு எம் பெற்றோரும் உற்றாரும் முன்னோரும் ஊட்டியது உணவு மட்டுமல்ல தன்மான உணர்வும் தான்!

இயற்கை விவசாயம் செய்யும் கூட்டுக்குடும்பம் எங்களுடையது; பத்துப் பதினைந்து பரம்பரைக் காலமாக! தொன்று தொட்டு எங்கள் பாட்டிமார்தான் குடும்பக் குருமார், திருமகள், கலைமகள், மலைமகள், பேராசான், தர்மதேவி, நீதி தேவி எல்லாம்!

கூட்டுக் குடும்பத்தை உடைத்து வீசிவிட்டு, ஒண்டிக் குழந்தைக் குடும்பம் நடத்திக் கொண்டு, உற்றார் பெற்றோரை விரட்டிவிட்டு, ஆடம்பரத்திற்கும் நுகர்வுக் கலாச்சாரத்திற்கும் அடிமைகளாகி அவற்றை அள்ளி அணிந்து கொண்டு நகர வாழ்க்கை வாழ்ந்தால் இப்படித்தான் இந்த சிவாஜி மாதிரி ஊத்தைவாயில் மெல்லப் பட்டு அசிங்கப் படவேண்டியதுதான்.

உங்கள் பதிவுகள் வந்தால் அவ்வப்போது எனது கருத்துக்களை இடுகிறேன்.
*********************************
குறிப்பு - கீழே ஒருவர், "ஊடகக் காமிராவிற்கு முன்னால் உட்கார்ந்தபடி என்ன வேண்டுமானாலும் போதிக்கலாம். ஆனால் நேரடியாக அந்த இடத்தில் இருந்துகொண்டு, உங்கள் எதிர்ப்பைக் காட்டிப் பாருங்கள், அந்த அரசியல் வாதிகளால் அப்புறம் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்" என்று, கருத்துப் பதித்துள்ளார் இல்லையா? அதுதான் உண்மை!!

எழுதியவர் : சித்திரைச் சந்திரன் - செல்வப் ப்ரியா. (28-Nov-23, 8:37 am)
பார்வை : 40

சிறந்த கட்டுரைகள்

மேலே