இரவுகள் மௌனமாய் விடிந்திடுதே
மூங்கிலாகவே நானிருந்தும்
இசை என்னாளும் பொழிந்த தில்லை
கனவு ஆயிரம் எனதிருந்தும்
இரவுகள் என்னை தேடவில்லை
உன் மூச்சினில் அன்பே
இசை மழை பொழியுதே
உன் கண்களில் உயிரே
காதல் கவிதை பேசுதே
உன் வார்த்தைகுள்
எனது இரவுகள் மெல்ல
மௌனமாய் விடிந்திடுதே