தாயன்பு

மனம் விரும்பாத கசப்பை
காத்திருந்து உண்ணச் செய்வாள்
தாயவள்தன் அன்பில் குழைத்து
கறைந்திடும் மெழுகாக யென்மனம்
அவள்நிலவு முகம்காணும் நொடியில்......

வாய்திறந்து விரும்பாத கசப்பை
தாயன்பின் இனிமையோடு ரசித்து
உண்பேன் உமிழ்நீரில் நனைத்து,
ஆனந்தத்தில் இதழ்ப்பதிப்பாள் தாய்
இனிப்பின் உச்சமுணரு மென்நாவு.....


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (28-Nov-23, 6:20 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : THAYANBU
பார்வை : 104

மேலே