காத்திருப்பு 1
வெறுமை குடிகொண்ட விழிகள்
தாயை காண காத்திருந்து
காணாமல் சூடிக் கொண்டன
விரக்தியை......
விரக்தியின் விளிம்பிலும் வெம்பிடாமல்
காத்திரு, செல்வம் சேர்த்து
அலுத்த பிறகு உன்னையும்
காண வருவாள் முடிவில்......
காலம் கடந்த தாய்மை
உணர்வும், மந்தித்த பசிக்கு
கிடைக்கும் உணவும் ஒன்றுதான்
குப்பை கிடங்கின் வரவு.....
கவிபாரதீ ✍️