கலைக்காமல் நின்றதுனைப் பார்த்தபின்னே சிரித்தாய்நீ

வெண்ணிற மேகம் விளையாடும் நீலவானம்
தண்பொழிலில் அந்தயெழில் பிம்பங்கள் தோன்ற
கலைத்திட வந்தது காற்றும் அலையாய்
கலைக்காமல் நின்றதுனைப் பார்த்து
------இன்னிசை வெண்பா
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
அலையும்வெண் மேகங்கள் விளையாடும் நீலவானம்
கலையாப்பூம் பொழிலில்வான் பிம்பங்கள் தோன்றிடவும்
கலைக்கத்தான் வந்ததுமென் பூங்காற்றும் அலைவடிவில்
கலைக்காமல் நின்றதுனைப் பார்த்தபின்னே சிரித்தாய்நீ

-------முதற்சீர் புளிமாங்காயும் ஏனைய சீர்கள் பல காய் பெற்றும் வந்து
முதற் சீர் ஒரே எதுகையும் மூன்றாம் சீர் மோனையுடன் பொலியும்
கலிவிருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Nov-23, 6:55 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 67

மேலே