அன்பின் இலக்கணம்

ஆழ்மனதின் பசப்பற்ற
பாசப் பெருக்கே
அழியா அன்பெனும்
அமிர்தம்.....

அமுத சுரபியாக
கொடுக்க கொடுக்க
குறையாமல் பெருகும்
மாயம்.....

முயன்று உருவாக்கும்
பொருளோ பணமோ
அல்ல தன்னியல்பாயது
பெருகும்.....

காணக் கிடைக்கா
மாசற்ற அன்பு
கலியுகத்தின் நிகரில்லா
பொக்கிஷம்....

ஆயுதமாய் அன்பைக்
கருதுவதே, ஆழமான
அன்பிற்க்கு பெரும்
இழுக்கு....

எதிர்பார் பில்லாத
அன்பே நிகரில்லா
அன்பின் முழு
இலக்கணம்.....

கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (29-Nov-23, 9:41 am)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : anbin ilakkanam
பார்வை : 1324

மேலே