காதல் கடிதம்

காற்றாலையாய் அவள்
எண்ணங்கள் என்மனதில்
சுற்ற, கவித்துவமாக
ஓர் காதல் கடிதம்
வரைந்தேன்.....

ஆசை அலைமோத
காத்து நின்றேன்
வந்தது பதில்
அவளின் தந்தை
ரூபத்தில்.....

வசவுகள் செவியில்
மோதித் தெறித்தது
தலை நிமிராது
சாய்து நின்றேன்
செவியை......

பொழிந்தபின் விலகினார்
கோவம் குறையாத
தந்தை வயதுடைய
என்னவளின் கணவன்,
திருமணமானவளா?

காதலுக்கு கண்ணில்லை
உண்மைதான் கழுத்து
தாலியை அறியவில்லை
நான், அவளைப்
பெற்றவர்களுக்குமா!!!

கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (29-Nov-23, 9:44 am)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : kaadhal kaditham
பார்வை : 875

மேலே