அடியார்க்கு இரங்கும் பிரான் -- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அடியார்க்கு இரங்கும் பிரான் -- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
****************
வாய்ப்பாடு :- இரு மா / காய் அரையடிக்கு
ஒன்று மற்றும் நான்காம் சீர்களில் மோனை
நரியைப் பரியாய் ஆக்கிநின்ற
----நாதன், அடிமு டியறிதற்காய் ,
கரியன் மாலும் , பிறப்பளிக்கும்
----கமல த்தானும் முயற்சியிட்டும் ;
அரிய வனாய்த்தி கழ்ந்தபிரான் ;
----அடியார் கண்முன் காட்சியுற்றும் ,
பரிந்தும் , கட்டு அன்னமிட்டும் ,
----பதவி யளித்துமே பார்த்தவரே !
†*********
கரியன் : கரு நிறங்கொண்ட திருமால்
கமலத்தான் : தாமரை மலரில் அமர்ந்திருக்கும் பிரம்மன்
அடியார் முன்பு தோன்றி இரங்கி படிக்காசு போன்றவை
அளித்தும்
கட்டு அன்னம் : கட்டமுது = நாவுக்கரசர் பசியாய் இருப்பது
அறிந்து திருப்பஞ்சீலி எனும் காவிரி வடகரைத்
தலத்தில் கட்டு சோறு அளித்தது.
ஆண்டு தோறும் அங்கு இந்த திருவிழா
நடைபெறுகிறது.