நகைச்சுவைடிஜிட்டல் பிச்சை

கோயில் வாசலில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரன்
கோயிலுக்கு சென்று கொண்டிருந்த பக்கதரிடம்
பிச்சைக் கேட்டான் :

ஐயா தர்மப் பிரபு கொஞ்சம் தர்மம் பண்ணுங்க
புண்ணியம் கிடைக்கும்

பக்தர் : ரொம்ப சாரி பா.....சில்லறை இல்லை கையில்
அடுத்த முறை பாப்போம்

பிச்சைக்காரன் அவரை விடுவதாக இல்லை :

ஐயா ,,,,அதற்கென்ன....பிரச்சனை ஒன்றும் இல்லை
எனக்கு ஜி..பெ பண்ணிடுங்க என்று
கைபேசி காட்ட
பக்தர்.......வேறு வழி தெரியாது ஐம்பது ருபாய் ஜி-பெ
செய்துவிட்டு போகின்றார்
(தன்னைத் தானே நொந்துகொண்டார்...கையில் பத்துரூபாய்
சில்லறை இருந்தும் இப்படி ஒரு நிலையா என்று !!!!!!)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (1-Dec-23, 12:44 pm)
பார்வை : 165

மேலே