குளுகுளு குற்றாலத்தில் குளித்த பின்னே

குளுகுளு குற்றாலத் தில்குளித்த பின்னே
குளிர்ந்திடும் நீரில் குளிருதோ மேனி
நனைந்த உடலில்நீ நாணத்தில் நிற்க
புனைந்தேனோர் பூங்கவி தை

----இன்னிசை வெண்பா

குளுகுளு குற்றாலத் தில்குளித்த பின்னே
குளிர்ந்திடும் மேனி குளிர -- குளித்து
நனைந்த உடலில்நீ நாணத்தில் நிற்க
புனைந்தேனோர் பூங்கவி தை

----நேரிசை வெண்பா


குளுகுளுபூங் குற்றாலத் தில்குளித்த பின்னே
குளிர்ந்திடும்நன் நீரினிலே குளிருதோஉன் மேனி
குளிர்ந்தபூமென் உடலில்நீ சற்றுநாணி நிற்க
குளிர்தமிழில் பூங்கவிதை புனைந்தேன்என் தேனே

----கருவிளங்காய் காய் காய் மா ----கலிவிருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Dec-23, 3:51 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 39

மேலே