வஞ்சி பாதிமேனி சேர்வாள் வஞ்சமிலா அன்பினிலே

நஞ்சிருக்கும் நல்லபாம்பு நம்சிவ னின்கழுத்தில்
செஞ்சசடை மீதிலே கங்கைநல் லாறிருக்கும்
கொஞ்சும் பிறைநிலவும் கூடவே வீற்றிருக்கும்
வஞ்சிபாதி மேனிசேர் வாள்

----இன்னிசை வெண்பா
========================================================================

நஞ்சிருக்கும் நல்லபாம்பு நம்சிவனின் நற்கழுத்தில்
செஞ்சசடை மீதினிலே கங்கைவான்நல் லாறிருக்கும்
கொஞ்சிடும்நல் வெண்பிறையும் கூடவேதான் வீற்றிருக்கும்
வஞ்சிபாதி மேனிசேர்வாள் வஞ்சமிலா அன்பினிலே

-----முற்றிலும் கூவிளங்காய் காளி விருத்தமாக
எதுகை மூன்றாம் சீர் மோனை பொலிந்து வர அமைந்த கலிவிருத்தம்

சில பொருட் குறிப்புகள் :--
========================
--கங்கைவான் நல்லாறு ---ஆகாய கங்கை வானிலிருந்து ஆற்றலுடன்
பெருகி வந்த போது தன் சடையில் தாங்கினான் சிவன் என்பது
கங்கை வரலாறு
---வஞ்சமிலா அன்பினிலே ----நெஞ்சில் வஞ்சமிலா இனம் தரும்
அபிராமி அந்தாதி
ஈசனின் இடப்பாகம் வஞ்சமிலா இனமாக சேர்க்கிறாள் அன்னை அன்பிலே

எழுதியவர் : கவின் சாரலன் (3-Dec-23, 6:10 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 26

மேலே