பிரம்மனிடம் ஓர் விண்ணப்பம் -- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பிரம்மனிடம் ஓர் விண்ணப்பம்
**********
( எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
( மா 6- கருவிளம் 1- )
ஒன்று மற்றும் ஐந்தாம் சீர்களில் மோனை
அன்பும், பண்பும், செயலு றுதற்கு
---அறிவும் அளித்த பிரம்மனே ;
அன்னப் பறவை மேலே யமர்ந்து,
---அண்டம் வலம்வ ருபவனே ;
தன்னி கரிலா அரக்கர்க் குவரம்,
---தந்து போற்றும் அருமையே ;
எந்தன் தலையெ ழுத்தை மாற்றி
---ஏனை யபிற ப்பறுத்திடு !
*******