இப்பிடி அசிங்கமான பேரையா
ஏன்டா பேரா நான் எழுதப்படிக்கத் தெரியாதவ. உன்னோட அப்பனுக்கு கையெழுத்து மட்டும் போடத் தெரியும். நம்ம பர்கூர் மலைல போக்குவரத்து இல்லாத பகுதில் நாம் குடியிருக்கிறோம். நமக்கு அஞ்சு மைலு தூரத்தில் தான் அஞ்சாம் வகுப்பு வரை படிக்கிற பள்ளிக்கூடம் இருக்குது. நீ அஞ்சாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாம போச்சு. தோட்ட வேலை பாக்குற நேரம் போக மத்த நேரத்தில் அந்த தொலைக்காட்சி பெட்டில ஓடற படங்களைத் தான் பாத்துட்டு இருக்கிற.
@@@@@@@
வேறென்ன செய்யறது பாட்டி?
@@@@@@
அது சரிடா. அதில் வர்ற ஒரு பேரை உம் பையனுக்கு வச்சிருக்கிறயே, அந்தப் பேரைச் சொல்லுடா?
@@@@@@@
அதுவா 'ஆபாஷ்குமார்'?
@@@@@@@
என்னது ஆபாசக்குமாரா?
@@@@@@
தூ. .. தூ... என்ன பேருடா இது. இப்பிடியா அசிங்கமான நேரே வைக்கிறது?
@@########
பாட்டி நமக்கு மலைக்கும் கீழே இருக்கிற பெரிய ஊரு அந்தியூர். நான் அங்க போயி முண்ணூறு ருவா குடுத்து இஷ்டலஇங்க சாஸ்திரி சோதிடர்கிட்ட சாதகக் குறிப்பு எழுதிட்டு வந்தேன். அவுரு தான் பையன் ராசிப்படி 'ஆபாஷ்குமார்'னு பேரு வைக்கச் சொன்னாரு. சாமி பேருனு சொன்னாரு.
@@@@@@@@
என்னதான் சாமி பேரா இருந்தாலும் இந்தப் பேரைக் கேக்கற நம்ம சொந்த பந்தம் என்னடா நெனைப்பாங்க?
@@@@@@@@.
பாட்டி நம்ம நம்ம பர்கூர் மலைல வசிக்கிற மக்கள் யாருமே என்னோட வயசில் உள்ள எல்லாப் பையன்கள் பொண்ணுங்க பேரும் இந்திப் பேருதான். 'ஆபாஷ்குமார்' இந்திப் பேரு. சாமி பேருனு சொன்னாப் போதும். யாரும் நம்ம செல்லம் 'ஆபாஷ்குமார்' பேரை ஆபாசப் பேருனு சொல்லமாட்டாங்க.
@@@#@@@@@
சரிடா பேரா சத்தீசு.
@@@@£€£££€€€€€€££££££££££££££££€€€€€
Abashkumar = Lord Shiva