மங்கியதோர் வான்நிலவில் மாலை வருவாயா

தங்கக் கிளியோநீ தாமரை செம்பூவோ
வங்கக் கடலினின் வன்புயலோ தென்றலோ
திங்கள் நிகர்த்த தெவிட்டாவெண் புன்னகையே
மங்கியதோர் வான்நிலவில் மாலை வருவாயா
சங்கத் தமிழ்தருவேன் கேள்

எழுதியவர் : கவின் சாரலன் (7-Dec-23, 9:05 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 60

மேலே