அற்புதமான காதல் கவிதை

🩷❤️🧡💛💚🩵💙💜🖤🩶🤍

*மீண்டும் ஒரு*
*காதல் கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🩷🤍🩶🖤💜💙🩵💚💛🧡❤️

சொக்குதே
மனம் சொக்குதே
உந்தன் சுடர்விழி
அழகினிலே !
திக்குதே வார்த்தை
திக்குதே !
உந்தன் தேன்மொழி
அழகினிலே !

வானம் வீட்டு
மண்ணில் வந்த
தேவதையோ ?
ஏடு விட்டு
எழுந்து வந்த சீதையோ ?

நீ பூவாகி வந்தால்
நான்
காம்பாகி தாங்குவேன்.... !
நீ தென்றலாகி வந்தால்
நான்
ஜன்னலாகி வரவேற்பேன்....!
நீ மழையாகி வந்தால்
நான்
மண்ணாகி நனைவேன்... !
நீ நிலவாகி வந்தால்
நான் இரவாகி ரசிப்பேன்....!.

இளநீர்
தீர்த்து வைக்காத தாகம்
உந்தன் இதழ்நீர் தான்
தீர்த்து வைக்குமோ....?

மஞ்சத்தில்
வராத தூக்கம்
உந்தன் மடியில் தான்
வந்திடுமோ.....?

இரவிலும் கிடைக்காத
அமைதி.....
உன் உறவில் தான்
கிடைத்திடுமோ.....?

எதிலும் நிறையாக
என் வாழ்க்கை
உன் அன்பில் தான்
நிறைந்திடுமோ.....?

உன் பாதம்
படும் போது தான்
எந்த வீடும்
சொர்க்கமும் ஆகுமே...
உந்தன் கரம்
தொடும் போது தான்
எந்த காரியமும் நலமாகுமே....

கடலில் சேர்ந்த
நதியைப் பிரித்தாலும்....
காற்றில் சேர்ந்த
மணத்தை பிரித்தாலும்......
கண்ணே!
என்னில் இருந்து
உன்னை பிரிக்க
என்னாலும் முடியாது....
என்னாளும் அது நடக்காது....

*கவிதை ரசிகன் குமரேசன்*

❤️🧡💛💚🩵🩷💙💜🖤🩶🤍

எழுதியவர் : கவிதை ரசிகன் (7-Dec-23, 9:04 pm)
பார்வை : 65

மேலே