மாமாவுக்கு தாலாட்டு

அல்லும் பகலும் அயராது உழைத்து விட்டு
அழுத்துப்போய் வரும் உங்களுக்கு
கை கால் அமுக்கி விட்டு
அழுக்கு சட்டை எல்லாம்
பளிச்சென்று துவைத்து
பசியாற ருசியாக
பலவகை சமையல் செய்து
பாசத்துடன் நான் ஊட்டி விட
நேச மச்சானே நெஞ்சார நீ சாப்பிடுமையா !!!
பொழுது விடிஞ்சதும் நீங்க
புலப்புக்கு போகனும்ல
கலைப்புதீர காலத்துல நீங்க தூங்க
பஞ்சு தலையணை வைத்து
பாயை விரித்து வைத்து
பாசத்துடன் தாயாக
ஆரிராரிராரோவென்று
தாலாட்டு நான் பாட
என் மடியில் தலை வைத்து
மாமாவே நீ தூங்குமைய்யா !!!