ஜாதி வெறி
. ஜாதி வெறி
🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪
வேரின்றி நீரின்றி
இலையின்றி விதையின்றி
கம்பிகளால் கைகோர்த்து
ஓரினமாய் கரண்ட்டு மரம்
அதில்
தெருவிளக்கு எரியக் கண்டு
தீராத காதல் கொண்டு
கிளை நீட்டி தொட்டு விட்டது
இளைஞனான வேப்பமரம்
மனிதருக்கு மட்டுமல்ல
மரங்களுக்கும் ஜாதி உண்டாம்
தொட்ட கிளையை கண்டுவிட்டால்
வெட்டுகிறது மனித இனம்
⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓