மாநகர வேப்பமரம்
மாநகர வேப்பமரம்
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
இலை நனைய பெய்தாலும்
இடுப்பளவு நின்றாலும்
புயல் மழையே நீ கூட
போக்கவில்லை என்தாகம்
சில சொட்டு நீர் கேட்டு
சிங்காரச் சென்னையில்
கான்கிரீட் தளத்தடியே
காத்திருக்கு என் வேர்கள்
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳