குலோத்துங்க சோழன் கோவை - நூல் -முதலாவது - களவியல்

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.
முதலாவது: - களவியல்.

முதலாவது-- கைக்கிளை.

அஃதாவது; தலைவன் மாட்டாவது தலைவி மாட்டாவது நிகழும் ஒருதலைக் காமம்; அவற்றுளிது தலைவன் பாற்படும் ஒருதலைக் காமமாய்க் காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிதல் என நான்கு வகைப்படும்; அவை வருமாறு:-

காட்சி.

ஐயம்.

(இ-ள்.) கண்டதலைவன் இவள் எந்த வுலகத்துப் பெண்ணோவென்று சந்தேகப்படுதலைக் கூறுதல்.

கட்டளைக் கலித்துறை

சங்கம ராச குலோத்துங்க சோழன் றமிழுறந்தைத்
துங்கன் வழிமுத லோனிட மோவவன் சூழிடமோ
வங்கவ னுக்கிரு ணீங்கிட மோவன்றி நண்பிடமோ
கொங்கவி ழுங்குழ லாட்கிட மேதெனக் கூறுவமே! 2

எழுதியவர் : அருணாசலக் கவிராயர் (13-Dec-23, 10:11 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே