நேரினில் வாராயோ நீ

நேரிசையில் வெண்பாவும் நீலம் விழியினில்
தேரினைப் பெற்றநறுந் தேன்முல்லை யோஇதழில்
காரினை வெல்லுமுன் கூந்தல்கா தல்பேசும்
நேரினில் வாராயோ நீ
----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

நேரிசையில் வெண்பாவும் நீலமுந்தன் விழியினிலே
தேரினையே பெற்றநறுந் தேன்முல்லை யோஇதழில்
காரினையும் வெல்லுமுந்தன் கூந்தல்கா தல்பேசும்
நேரினிலே வாராயோ நீகாதல் பேசாயோ

---கூவிளங்காய் காய் காய் காய் கலிவிருத்தம்
எதுகை மோனை அழகுடன்

நேரிசையில் வெண்பாவும் நீலமுந்தன் விழியினிலே
தேரினையே பெற்றநறுந் தேன்முல்லை இதழினிலே
காரினையும் வெல்லுமுந்தன் குழல்காத லினைப்பேசும்
நேரினிலே வருவாயா நயனமொழி தருவாயா

----காய் முன் நிரை நிறுத்தி கலித்தளை மிகுத்துவர அமைத்து
உருவாக்கப்பட்ட தரவு கொச்சகக் கலிப்பா

எழுதியவர் : கவின் சாரலன் (15-Dec-23, 8:29 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 53

மேலே