பாராட்டும் பதவியும்
வெண்பாக்கள்
மோதிரம் கையாலே மொட்டுன்னு குட்டுவாங்கு
பாத்திரம் பார்த்து பதவிகொடு --- கோத்திரம்
பார்த்து மணம்முடி பாரதப்பண் பாடிது
ஆர்வலரைத் தேர்ந்தது அன்று
ஆர்வலர் -- பரிசில் பெற போட்டியில் பங்கு கொள்வோர்
அன்று ஊத்தை பீத்தைகளை கற்கார் ஏற்று சான்றோர் பாராட்டார்.....
பரிசிலுடன் பட்டம் பதவித்தக் கார்க்கே
உரித்தில்லை இன்றை யுலகினில் --- ஊட்டத்
தருவாரா மெப்பதவி தக்கவாரா யாதே
பெருமையென் கொள்வததில் பேறு
ஊட்ட == கையூட்டு
பரிசில் பெறவேண்டுமாயின் கூட அன்று தகுதியிருந்தால் மட்டுமே பெற முடியும்.
.....