ஆண்யா - பெண்யா
டேய் சகலை உன்னை நினைச்சா எனக்கு சிரிப்புத்தான் வருது.
@@@@@
ஏன்டா சகலை. நான் என்ன கோமாளியா நீ என்னைப் பார்த்து சிரிக்க?
@#@#@@@
உன் மனைவிக்குப் பிறந்தது பெண் குழந்தை. அந்தக் குழந்தைக்கு என்ன பேரு வச்சிருக்க?
@@@@@@@
அழகான இந்திப் பேரு. 'ஆண்யா'.
@@@@@@@
நீ 'ஆண்'தான்டா. உன் மகள் பெண் குழந்தை. நீ அந்தக் குழந்தையை 'ஆண்யா, ஆண்யா'னு கூப்பிட்டா ஊரிலிருக்கிற நம்ம மக்கள் என்ன சொல்லுவாங்க? "பெண் குழந்தைக்கு 'ஆண்யா'னு பேராம். என்ன அநியாயம். கலி முத்திப் போச்சு"னு பேச்சு வரும்டா.
@@#@@@@@@
'ஆண்யா' இந்திப் பேருன்னு சொன்னாப் போதும் எல்லா மக்களும் "ஆண்யா ஸ்வீட் நேம்"னு சொல்லுவாங்கடா சகலை. சரி உன்னோட பெண் குழந்தை பேரு?
@@@#####@#
நீ முட்டாள்தனமான பெண் குழந்தைக்கு"ஆண்யா"னு வச்சிட்டே. நான் நல்லா சிந்திச்சு என் பெண் குழந்தைக்கு 'பெண்யா'னு பேரு வச்சிருக்கிறேன். இந்திப் பேரு மாதிரி இருந்தாலும் என் குழந்தை பேரு தமிழ்ப் பேருடா சகலை. தமிழ்ப் பேரு.
@@@@@
போடா சகலை. பேரில்ல என்னடா இருக்குது.
@@####@@@@@@@@@@@##@@@@@@##
Aanya = Gracious.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்