அடல் - படல்
சோதிடர்:
வாப்பா முருகப்பா. நல்ல செய்தி தானே?
@@@@@@
ஆமாங்க ஐயா. என் பையன் மனைவிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்குதுங்க. முதலில் பிறந்தது பையன். இரண்டாவதாக பிறந்தது பெண் குழந்தை.
@@@#@@
ரொம்ப சந்தோசம் முருகப்பா.
@@@@@@@
நேத்து சரியா காலை பதினோரு மணிக்கு பிறந்தாங்க.
@@@@@@@@
கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி அதே நேரத்தில் நேத்து பிறந்த ஒரு குழந்தைக்கு எழுதின சாதகக் குறிப்பு கம்ப்யூட்டர்ல இருக்குது. அது உன் பேர்க் குழந்தைகளுக்கும் பொருந்தும்.
@@@@@@@
சரிங்க ஐயா. நீங்களே என் பேர்க் குழந்தைகளுக்குப் பேரு வச்சிருங்க ஐயா.
@@@@##
இப்ப எல்லாம் தமிழர்கள் யாரும் அவுங்க குழந்தைகளுக்கு தமிழ்ப் பேருங்கள வைக்கிறதில்லை.
@@####
அது எனக்குத் தெரியுமுங்க ஐயா. புதுமையான இந்திப் பேருங்கள வச்சிருங்க.
#########
பையனுக்கு 'அடல்'னு பேரு வச்சிடுங்க. நம்ம சென்னை பெருநகரத்தில அந்தப் பேரில் யாருமே இல்லை. பேத்திக்கு 'படல்'னு வச்சிடுங்க.
@@@@@@@
படல். ஆடு மாடுகளை அடைக்கிற பட்டியலைச் சுத்தி வைக்கிற 'படல்'லுங்களா இந்தப் பேரு?
@@@###@
ஏம்மா நீ உன் பேரக் குழந்தைகளுக்கு இந்திப் பேருங்கள வைக்கச் சொன்ன. நானும் கடந்த நாற்பது வருசமா எந்தக் குழந்தைக்கும் தமிழ்ப் பேரு வச்சதில்லை. என்னிடம் வர்ற பெற்றோர் எல்லோரும் அவுங்க பிள்ளைகளுக்கு இந்திப் பேரை வைக்கச் சொல்லித்தான் கேக்கறாங்க.
நீ சொன்னதுக்கு அப்பறம் உன் பேத்திக்கு தமிழ்ப் பேரை வைக்கிறதுக்கு நான் என்ன முட்டாளா? 'படல்' இந்திப் பேரு முருகப்பா. அதுவும் சாமி பேரு.
@@@@@
அப்ப சரிங்க சோதிடர் ஐயா. 'அடல். படல்'. என்ன பொருத்தம் இந்தப் பேரும் பொருத்தம். இந்த அருமையான இந்திப் பேருங்கள என் பேரக் குழந்தைகளுக்கு வச்ச உங்களுக்கு 'சிந்தாபாத்து'ங்க ஐயா.
@@@@@@
உன்னுடைய வாழ்த்துக்கு நன்றி முருகப்பா. பேரு வச்சதுக்கு ஆயிரம். சாதகக் குறிப்புக்கு ஆயிரம். இரண்டாயிரம்.
@@@@@
இந்தாங்க ஐயா.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Atal = Immovable, Unskakeable, Strong. Masculine name.
Patal = Goddess Durga. Feminine name.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்