ஆருத்ரா தரிசனம்

வடமொழியில் திருவாதிரை
ஆருத்ரா என்றழைக்க
அன்று நடந்த தரிசனமே
ஆருத்ரா தரிசனமாம்

கர்மம் மட்டும் செய்து வாழ்க
கடவுள் என்பார் இல்லையென்று
தருகாவன முனிகள் பலர்
தங்கள் வீட்டில் வேள்வி செய்ய

பாடம் புகட்ட வேண்டி சிவன்
பார்வையிலே கோபம் எழ
பிட்சாடனர் வேடம் பூண்டு
பிச்சை கேட்டார் முனிகள் வீட்டில்

தடைகள் செய்த சிவனை சிலர்
தட்டி தூக்க வேண்டுமென்று
எரியும் வேள்வித் தீயில் பலர்
எட்டு மந்திரங்கள் கூற

வேள்வித் தீயில் ஏவிவிட்ட
மான் உடுக்கை முயலகனை
ஆடையாக அணிந்த சிவன்
அக்கினியை ஏற்றுக்கொண்டார்

வந்த மத யானையினை
வலது காலில் மிதித்தழித்து
இடது காலைத் தூக்கிய பின்
நடராஜர் அவதரித்தார்

தாங்கள் செய்த தவறுணர்ந்து
தவம் புரிந்த முனிவர்களை
திருவிளையாடல் புரிந்து
திருத்தும் அந்த தரிசனமே

ஆருத்ரா தரிசனம்

எழுதியவர் : Kannan selvaraj (26-Dec-23, 5:38 pm)
சேர்த்தது : Kannan selvaraj
பார்வை : 77

மேலே