பிரிவினையில் ஒற்றுமை
வேற்றுமையில் ஒற்றுமை !!
———-
ஒருவரைப் போலவே
மற்றவர் இல்லையே /
பிரிவினை சாதிகள்
நிறங்களும் தொல்லையே /
இனங்களும் மதங்களும்
யாவர்க்கும் கெடுதலே /
சுதந்திரம் சோதரத்துவம்
சமத்துவமே நாடு /
மானுடம் என்பதே
மாண்பெனப் பாடு !
-யாதுமறியான்.