புத்தாண்டுப் பொற்கதவு தன்னைத் திறந்துவா

welcome 2024

புத்தாண்டுப் பொற்கதவு தன்னைத் திறந்துவா
முத்தமிழ் பேசிடும் முத்துநிகர் புன்னகையே
அக்கரைச் சீமையின் ஆங்கிலப் புத்தாண்டில்
மிக்கநன்றி எந்தன்நல் வாழ்த்து


-----அனைவருக்கும் எழுத்திற்கும் என்னினிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
அன்புடன் , கவின் சாரலன்

புத்தாண்டுப் பொற்கதவு தன்னைநீயும் திறந்துவாராய்
முத்தமிழைப் பேசிடுமென் முத்துநிகர் புன்னகையே
புத்தெழில்வெண் சீமையினர் தந்துசென்ற புத்தாண்டில்
மெத்தநன்றி எந்தன்நல் வாழ்த்துக்கள் காதலியே

----காய் காய் காய் காய் கலிவிருத்தம் மோனைப் பொலிவுடன்

புத்தாண்டு மலர்க்கதவு தனைநீயும் திறந்துவாராய்
முத்தமிழில் மொழிந்திடுமென் முத்துநிகர் இளநகையே
புத்தெழில்வெண் சீமையினர் தந்துசென்ற புத்தாண்டில்
மெத்தநன்றி நவில்வேன்நல் வாழ்த்துக்கள் எனதன்பே

-----காய் முன் நிரை நிறுத்தி கலித்தளை மிகுந்து வரப் புனைந்த
தரவு கொச்சகக் கலிப்பா
ஓசை :
இங்கே கலித்தளையுடன் வெண்டளை விரவி வந்ததால்
இது பிரிந்திசைத் துள்ளல் ஓசை உடைய தரவு கொச்சகக் கலிப்பா

எழுதியவர் : கவின் சாரலன் (1-Jan-24, 8:16 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 44

சிறந்த கவிதைகள்

மேலே