வந்தாய்நீ வஞ்சியிள மான்

நந்தவன நற்பூ நறுமணம் வீசிட
அந்திப் பொழுதினின் ஆதவன் சென்றிட
சந்ரோ தயமாயோர் சாயந் திரயெழிலாய்
வந்தாய்நீ வஞ்சியிள மான்

நந்தவன நற்பூக்கள் நறுமணத்தை வீசிடவே
அந்தியிளம் பொழுதினிலே ஆதவனும் சென்றபின்னே
சந்திரனின் வடிவினிலே சாயந்த்ர பேரெழிலாய்
வந்தாய்நீ வஞ்சியிள மான்நன்றி நவின்றேன்நான்


நந்தவன நற்பூக்கள் நறுமணத்தை வீசிடவே
அந்தியிளம் பொழுதினிலே ஆதவனும் விடைபகர
சந்திரனின் வடிவினிலே சாயந்த்ர எழிலினிலே
வந்தாய்நீ இளவஞ்சி மான்நன்றி நவின்றேன்நான்

-----வெண்பா கலிவிருத்தம் தரவு கொச்சகக் கலிப்பா
மூன்றாம் சீர் மோனைப்பொலிவுடன்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Jan-24, 7:01 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 75

மேலே