வஞ்சியே துயிலெழுவாய்

மலர்த்தொட்டினில் வண்டுறங்கிட
பூந்தென்றலும் இசைபாடிட
புலர்காலையின் இளம்பொழுதினில்
இளங்கதிரொளி துயிலெழுப்பிட
கண்விழித்த பொன்வண்டு
வான்வெளியினில் பறந்தது
ரீங்கார இசைபாடியே
நானும்
வந்து திருப்பள்ளி யெழுச்சி உனக்கு
பாட வேண்டுமோ என்னிளங் கிளியே