காலமெல்லாம் காத்திருப்பேன்
புபூ 1/11 10
காலமெல்லாம் காத்திருப்பேன் !!
——-
காலமெல்லாம் காத்திருப்பேன்
கன்னியுனைப் பார்த்திருப்பேன் /
ஞாலமெல்லாம் தேடியெந்தன்
நாயகியைக் கைப்பிடிப்பேன் /
உலகினிலே வாழ்க்கையதும்
ஒருமுறையே கிட்டிடுமே /
விலகிடாத நேசமுமே
வியந்திடவே வைத்திடுமே /
எனக்கெனவே பிறந்தவளும்
என்னிடத்தே வரும்வரையில் /
மனம்தேற்றி உயிர்க்காத்து
மங்கையினை அடைவேனே /
பெற்றவரும் மற்றவரும்
பிரித்துவிட முயன்றாலும் /
நற்றமிழும் இசையுமென
நாமிணைந்து இருப்போமே /
கடந்திட்ட நேரமெல்லாம்
கண்களிலே வாழ்ந்தாயே /
உடனேகிப் போகலாமே
உலகினையே வெல்லலாமே !!
-யாதுமறியான்.