மோக முகை
ஒரு பாடல் இரு யாப்பு
************************
(கட்டளைக்கலித்துறை)
*
நெற்றியின் குங்குமம் நெஞ்சினில் நின்று நிறைவளிக்க
வெற்றியின் புன்னகை வீசிய வண்ணம் விருந்துவைக்கச்
சுற்றிய பார்வையின் சூழ்ச்சியில் சொக்கிச் சுழலுமின்பம்
முற்றிய காதலின் முன்வரும் மோக முகையவிழ்ப்பே
*
(அறுசீர் விருத்தம் )
நெற்றியின் குங்குமம் நெஞ்சினில்
நின்று நிறைவ ளிக்க
வெற்றியின் புன்னகை வீசிய
வண்ணம் விருந்து வைக்கச்
சுற்றிய பார்வையின் சூழ்ச்சியில்
சொக்கிச் சுழலு மின்பம்
முற்றிய காதலின் முன்வரும்
மோக முகைய விழ்ப்பே!
*
மெய்யன் நடராஜ்