இயற்கை, மனிதன், இறைவன்

விண்ணில் ஓர் செயற்கை கோளை செலுத்திவிட்டு
மண்ணில் இருக்கும் மனிதன் தன்னையே மறந்து
கண்ணைமூடி தன்னையே இறைவன்போல் படைப்பவன்
என்று எண்ணுகிறான் என்ன அறியாமை இது
விண்ணிலே சுழன்று கொண்டிருக்கும் எண்ணிலா
விண்மீன்கள், கோள்கள், அண்டங்கள் இவற்றை
அங்கு விண்ணிலே விளையாடவிட்டு வேடிக்கைப்
பார்க்கும் ஆண்டவன் மனிதன் சிந்தனைக்கு
வர தவறுவதேன் ? தன்னைத் தானே பெரியோன்
என்று தவறாய் இந்த இந்த சிறியோன் அகந்தை
தலைக்கேற பித்தனைப்போல் இருப்பதாலே தான்
இறுமாப்பில் அகம்காரம் கொண்டு அலைபவன் வீணன்
அவன்தான் இறைவன் இல்லை என்று சொல்லித்திரியும்
நாத்திகன்....தன்னையே நம்பி இருப்பவனாம் இவன்!
அவன் உடலே அவனை நம்புவதில்லையே ? ஆம் எப்போது
இவன் உடல் அழியும் என்று இவன் அறிந்தவனா ? இல்லையே !
கொட்டும் மழையை, வெடிக்கும் வெடிமலையை, குமுறும்
கடலின் சுனாமியை, நிலநடுக்கத்தை ...இவற்றில் எதையாவது
ஒன்றை இவன் (நாத்திகன்) தடுத்து நிறுத்துவானா ? சாவை
இவனால் தடுக்க முடியுமா ? இல்லையே பின் ஏன் ஆணவம்

இயற்கையுடன் இயைந்து வாழ் மனிதா ,,,,
இயற்கை உனக்கு தாய், தந்தை, இறைவன்
இயற்கையுடன் மோத நினைக்காதே
அதில் உன் அழிவு இருப்பதை அறிந்திடு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (6-Jan-24, 1:04 pm)
பார்வை : 276

மேலே