பௌர்ணமி அலைகளில் பளிச்சிடும் பால்போல் நிலவே
குறையிலா மனிதர் இல்லை குறைகூறு வோருளர்
நிறைகுடம் போல்வாழ்வோர் எத்தனைபேர் இந்த உலகிலே
பிறைநிலா வானில் குறைதான் எனினும்
நிறையெழில் ஓவியமாய் காட்சி தருமே
நெற்றியில் பிறைநிலா நெஞ்சில் முழுநிலா
கற்றுத் தருவாயா காதல் நீநிலா
தேய்ந்தால் பிறைநீ முழுமையில் பௌர்ணமி
காய்ந்து தேய்ந்தாயோ காதலுக் காகவேநீ
பௌர்ணமி அலைகளில் பளிச்சிடும் பால்போல் நிலவேநின்
சௌந்தரிய பேரெழிலை எப்பாவில் பாடவோ சொல்வாய்
----ஒரே அடி எதுகை ஒரே அளவினால் ஆனா இரு குறளடிகளால்
அமைந்த வெண்பாவின் பாவினம்
இவைகள் குறள் வெண்செந்துறை