வையத்தில் தாமரை, வானிலும் ஓர் தாமரை- பஃறொடை வெண்பா
இங்கே வையத்தில் ஆதவன் பட்டொளியால்
பொங்கும் மகிழ்ச்சியால் மொட்டவிழ்க்கும் தாமரை
வானிலே ஆகாய ஒற்றைப்பூ மாமலராய்
வெண்தாமரை வெண்ணிலவாய் மண்ணிற்கே தன்னொளி
தந்திடுதே சந்திரனும் சூரியன் கற்றோளியால்
என்னென்பேன் இவ்வியற்கை நிகழ்வு