இளங்கதிர் மெல்ல வருடி துயிலெழுப்ப

மலர்த் தொட்டிலில் வண்டுறங்க
பூந்தென்றல் இசைபாடித் தாலாட்ட
புலர் காலைப் பொழுதின்
இளங்கதிர் மெல்ல வருடி துயிலெழுப்ப
கண்விழித்த பொன்வண்டு
சிறகு விரித்து பறந்தது
வானில்
புதிய ரீங்காரம் பாடி

நான் வேறு வந்து திருப்பள்ளியெழுச்சி
பாடவேண்டுமோ உனக்கு
எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ
மார்கழி பனிக்காலையில் !

எழுதியவர் : கவின் சாரலன் (2-Jan-24, 9:55 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 57

மேலே