கனிகுலுங்கும் மாமரத் தோப்பினில் வந்தாய்

கனிகுலுங்கும் மாமரத் தோப்பினில் வந்தாய்
கனியிதழில் முத்துக்கள் கோர்த்துச் சிரித்தாய்
பனியில் நனையும்செம் பூதந்தாய் வாய்ப்பு
நனிநற் கவிபுனைய நான்

----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

கனிகுலுங்கும் மாமரத் தோப்பினில் வந்தாய்
கனியிதழில் முத்தாய்ச் சிரித்தாய் --தனியாய்
பனியில் நனையும்செம் பூதந்தாய் வாய்ப்பு
நனிநற் கவிபுனைய நான்

----ஒரு விகற்ப நேரிசை வெண்பா

எதுகை--கனி கனி பனி நனி --னி இரண்டாம் எழுத்து எதுகை
முதலையெழுத்து க க ப ந எல்லாம் குறில்
தேனிதழில் ---எதுகை ஆகாது தே நெடில் என்பதால்

மோனை :- 1 3 ஆம் சீரில் க தோ-- இன மோனை
--------------------------------------க கோ -- வர்க்க மோனை
---------------------------------------ப பூ --- வர்க்க மோனை
--------------------------------------ந நா ----அதே எழுத்து மோனை

எழுதியவர் : கவின் சாரலன் (13-Jan-24, 9:28 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 46

மேலே