அருகும் உயிரி
வானம் பாத்து கெடந்தோம்,
வருசம் பூரா விரயப் பட்டோம்...!
முப்போகமும் வெளஞ்ச பூமி,
முழுசா தருசா போனதய்யா !
பண்ணையாரிடம் பட்ட கடன்,
பல மடங்கா ஆனதய்யா !
பட்ட கடனுக்கு, தாரை வார்த்தேன்,
புள்ளையா வளத்த நிலத்தை!
ஊருக்கு சோறு போட்ட உழவன் நான்,
இப்போ கூலிக்கு கஞ்சி குடிக்கிறேன்!
வழி தவறிப் போன புள்ளையா- என் நிலம்,
பண்ணையாரிடம் போய், பல மாடியாகிப்போச்சு!
வானம் பொய்த்ததாலே, மானம் கேட்டு போனேன்,
மருகி மருகி தேடினாலும், நான் வர மாட்டேன்..!
இனி நானும் ஒரு அருகும் உயிரி தான்..!
- உழவன்