சுற்றுச் சூழல் கவிதை

காலையிலே கருக்கலிலே கிளிகொஞ்சும்
சோலையிலே நடக்கையிலே
சாலையிலே ஆளில்லை செந்நெல்
ஆலைமணம் கமழுமன்று
சோகையான புல்வெளிகள்; வாகனங்கள்
போகையிலே பெருந்தூசிப்
புகைமண்டும் குழிவிழுந்த சாலைகளும்
நகைப்புத்தான் வருகுதின்று.

எழுதியவர் : உதய நிலவன் (23-Jan-24, 9:40 am)
சேர்த்தது : Dr B Chandramouli
பார்வை : 91

மேலே