மனிதன் மாறவில்லை –அவன் வேட்கை தீரவில்லை

காலத்தை மாற்றினான்
கட்சியை மாற்றினான்
கோலத்தை மாற்றினான் 
கொள்கையை மாற்றினான் –ஆனால்
மனிதன் மாறவில்லை –அவன்
வேட்கை தீரவில்லை..

காட்டு நிலங்களை அழித்துவிட்டான் –அவன்
கரடி புலியை விரட்டிவிட்டான்
கோட்டையில் கொடியை ஏற்றிவிட்டான் –அதில்
பேசும் வகையை மாற்றி விட்டான் –ஆனால்
மனிதன் மாறவில்லை –அவன் வேட்கை தீரவில்லை..

கையளவேதான் இதயம் வைத்தான்
கடல்போல் அதிலே ஆசை வைத்தான்
மெய்யும் பொய்யும் கலந்து சொன்னான் –அதில்
ஏழை மனிதரை மாற்றிவிட்டான் – ஆனால்
ஏழையின் வாழ்க்கை உயரவில்லை.!!

காலத்தை மாற்றினான்
கட்சியை மாற்றினான்
கோலத்தை மாற்றினான் 
கொள்கையை மாற்றினான் –ஆனால்
வேறெதுவம் மாறவில்லை – ஏழை
வாழ்க்கை உயரவில்லை.!!


இது பொது அரசியல் நையாண்டி
எந்தக் கட்சிக்கும் பொருந்துமே !! (கண்ணதாசன் மன்னிக்க !!)

எழுதியவர் : உதய நிலவன் (17-Jan-24, 7:00 pm)
சேர்த்தது : Dr B Chandramouli
பார்வை : 130

மேலே