இரட்டைக் கிளவி

பொல பொல வென விடிந்தது பொழுது
கீசு கீசு செனப் பறவை ஒலி கேட்டு
கத கத ப்பான படுக்கையிலிருந்து எழுந்து
மள மள வெனச் சுத்திசெய்து
சுடச் சுட வந்த காபிக்குப் பின்
சட சட வெனப் படியிறங்கி
சிலு சிலு வெனக் காற்று வீச,
விறு விறு வென நடை போட்டேன்
கிறு கிறு வென வெயிலேற, வீடு திரும்ப,
கல கல வெனப் பேசும் மனை நல்லாள்
சிடு சிடு வென முறைப்புடன்
பிலு பிலு வெனப் பிடித்துக் கொண்டாள்
பால் பாக்கெட் மறந்துவிட்டேனாம் !!
திரு திரு வென விழித்தேன் !!!

எழுதியவர் : உதய நிலவன் (26-Jan-24, 5:33 am)
சேர்த்தது : Dr B Chandramouli
பார்வை : 115

சிறந்த நகைச்சுவைகள்

மேலே