இளமை நினைவுகள்

இளமை நினைவுகள்!
——

பல்லாங்குழி ஆட்டம்
பழையதாக மாறிடுமோ /
எல்லோரும் அமர்ந்து
எதிரெதிரே ஆடுவோமே /

நேரமெல்லாம் நம்கையில்
நினைத்தபடி நடந்தோமே /
ஊரெல்லாம் ஒன்றாக
ஒற்றுமையாய் வாழ்ந்தோமே /

ஆடுபுலி ஆட்டத்தை
ஆண்கலெல்லாம் ஆடுகையில் /
வீடதிரப் பெண்களுமே
விளையாடிக் களிப்போமே /

நாகரிகப் போர்வையிலே
நல்லதெல்லாம் தொலைத்துவிட்டு /
வேகமாக ஓடியோடி
வியர்ப்பதுவும் ஏனடியோ !!

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான். (27-Jan-24, 4:57 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 85

மேலே