விடியல் நாளை உனது வசம்

கனவுகளே கனவுகளே
கலைந்து போக சொல்கின்றேன்
நிதர்சன உண்மை என்னவென்றால்
எதுவும் எளிதல்ல இங்கே...

கனவுகள் நிஜமாக முயல்கிறோம் நாம்
இங்கு நிஜமே கனவாய் போகிறதே
முயல்வதே முதல் வெற்றி என்று
முயன்று முயன்று தோற்க்கிறோம் நாம்

ஏற்றத்தில் சரிவு இயல்பு
எதுவும் தடையல்ல முயலு
வெற்றி உன்னைத் தேடி வரும்
விடியல் நாளை உனது வசம்

எழுதியவர் : ருத்ரன் (31-Jan-24, 6:22 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 65

மேலே