பெண்மை வாழட்டும்
பெண்மை வாழட்டும் !!
———-
பெண்மை வாழட்டும்
பேருலகம் போற்றட்டும்/
போற்றட்டும் மகளிரின்
புத்தாக்கச் செயல்களையே /
செயல்களையே அளவீடாய்
செய்திடுவோம் நாட்டினிலே /
நாட்டினிலே இருபாலர்
சமவாய்ப்பை ஏற்றிடுவோம் /
ஏற்றிடுவோம் உள்ளத்திலும்
இல்லத்திலும் தீபங்களை /
தீபங்களைப் பற்றவைத்து
தீயவற்றைத் தடுத்திடுவோம் /
தடுத்திடுவோம் சிசுக்கொலை
தாரணியில் எவ்விடமும் /
எவ்விடமும் எந்நாளும்
பெண்மை வாழட்டும் !!
-யாதுமறியான்.