விண்ணிற் றோன்றிடும் வியன்னிலா - கலித்துறை

கலிநிலைத்துறை
(குறிலீற்றுமா கூவிளம் விளம் விளம் விளம்)

விண்ணிற் றோன்றிடும் வியன்னிலா விந்தையுங்
..காட்டுதே;
பெண்கள் பார்த்திடும் பார்வையில் பேதமுங்
..கண்டிலேன்!
கண்கள் காண்கிற காட்சியிற் கள்ளமு
..மில்லையே;
உண்மை சொல்லுவா யுன்றனி னுள்ளத்தி
..லுள்ளதை!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Feb-24, 6:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே