தமிழ்மொழி இங்கே தழைக்கா திருக்க -- இன்னிசை வெண்பா
தமிழ்மொழி இங்கே தழைக்கா திருக்க -- இன்னிசை வெண்பா
**********
அமிழ்தாம் தமிழில், அலங்காரப் பேச்சில்,
தமிழனைச் சாய்த்துத் தமிழகம் ஆண்டும் ;
தமிழை ஒதுக்கித் தரக்கல்வி போற்ற ;
தமிழினக் காவலரோ இங்கு !
தமிழ்மொழி இங்கே தழைக்கா திருக்க
தமிழகத்துப் பள்ளிகளே சான்று ! ( குறள் வெண்பா)
( தமிழகத்தை ஆண்ட ஆளும் அரசியல் வாதிகள் தமிழைப் பாடமாகவோ
பயிற்று மொழியாகவோ கொள்ளாது வேற்று மொழி கற்பிக்கும்
கொடுமை கண்டு இப்பதிவு)