பாவகை சொல்வகை
(எனது கவிதைகளுக்கு அறிவுரை வழங்கி, திருத்தியமைத்து, எனது சமீபத்திய வெண்பாவைப் பாராட்டிய மரு. கன்னியப்பன் அவர்களுக்குச் சமர்ப்பணம் )
(இது ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய இரு விகற்ப நேரிசை வெண்பா )
இன்னினிய பாக்கள் இனிதுநான் கற்றுவரச்
சொன்னம்போல் என்றனுக்குச் சொல்லுகின்றார் - கன்னியப்பர்!
பாவகை சொல்வகை பாங்குறவே காட்டிடவே
பாவகை கற்றேன் பல!