அடுத்த பூமி
சமையலறையில் நீ இருந்தால்
சந்திராயனும் படம் பிடிக்கும்
விஞ்ஞானிகள் தேடினாலும்
விட்டு விட்டு லைன் கிடைக்கும்
மழையினிலே நீ நனைந்தால்
மங்கள்யானும் தரையிறங்கும்
வெண்ணிலாவில் குடை வாங்கி
வேகமாக மண்ணிறங்கும்
ஆதித்யா விண்கலமும்
அதன் பாதை மாறக்கூடும்
ஆட்கள் இல்லா தீவுக்கு உன்னை
அழைத்து காதல் சொல்லக் கூடும்
உலகில் உள்ள கோள்கள் எல்லாம்
உன் அழகில் சொக்கி நிற்கும்
நின் பேச்சைக் கேட்ட கணம்
நீள் வட்டப் பாதை மாறும்
ஆகாயம் கூட்டிச் செல்ல
ஆண்டவனும் வேண்டக் கூடும்
அடுத்த பூமி ஒன்று செய்து
அரசியாய் உனை ஆக்க கூடும்