முத்தமிடுகிறாய்

இரவு என்னும் சோலையிலே
துயிலுறங்கும் பறவைப் போலே
உன் மடியில் நான் கிடந்து
உறங்குகின்றேன் குழந்தைப் போலே

கொள்ளை தூரம் பறந்து வந்து
கொத்தித் தின்னும் கழுகைப் போலே
எங்கிருந்தோ வந்து என்னை
உண்ணுகின்றாய் இரையை போலே

மூன்று நிமிட இடைவெளியில்
முத்தமிடும் தாயைப் போலே
வயது வந்த என்னை நீயும்
வாட்டுகின்றாய் தினமும் மாலை

வெட்ட வெட்ட வளரும் அந்த
மரத்தினுடைய கிளையைப் போலே
எட்டி தூரம் வந்த பின்பும் - என்னை
இழுக்கிறாயே காந்தம் போலே

இட்லி தோசை பொங்கலோடு
சேர்த்து வைக்கும் வடையை போலே
பத்து வேலை இருந்தும் உந்தன்
பல்லிடுகிறாய் கன்னம் மேலே

எழுதியவர் : கண்ணன் செல்வராஜ் (27-Feb-24, 9:20 pm)
சேர்த்தது : Kannan selvaraj
பார்வை : 159

மேலே