தாய்மொழி

தாய்மொழி


தொட்டிலில் பிறந்த மொழி

தொன்மைமிகு தமிழ் மொழி


காற்றில் மிதந்த மொழி

காவியத்தில் உதிர்ந்த மொழி


ஏட்டில் எழுதிய மொழி

எங்கள் மொழி எளிய மொழி


சிந்தையைத் தூண்டும் மொழி

தென்பொதிகை உதித்த மொழி


எங்கள் தாய்மொழி

எங்கள் தாய்மொழி - இதுவே

எங்கள் தமிழ்மொழி!

எழுதியவர் : கவிஞர் மா.தமிழ்ச்செல்வி (28-Feb-24, 10:41 am)
சேர்த்தது : Dr M Tamilselvi
Tanglish : thaaimozhi
பார்வை : 934

மேலே