புதிர் வட்டம்

புதிர் வட்டம் .

அப்பா ...அப்பா..
சந்தேகம் ஒன்னு
கேட்கட்டுமா?
கேளடா கண்ணா
தெரிந்ததை சொல்லுறேன்
கேட்டுக்கோ
விதையிலிருந்து செடி வந்ததா?
செடியிலிருந்து விதை வந்ததா?
விடையை நீயும் புரிய சொல்லு
தலையை சுத்துது விரைவாய் சொல்லு
கண்ணே நீயும் பொறுத்திடுவாய்
தெரிந்ததை சொல்லுறேன் கேட்டிடுவாய்
இதுபோல் புதிர்கள் பல உண்டு
கோழியில் இருந்து முட்டை வந்ததா?
முட்டையில் இருந்து கோழி வந்ததா?
சரியா தப்பா தெரியாது
யோசித்து நீயும் புரிஞ்சிக்கோ
எதற்குள் இருந்து எது வந்தாலும்
ஒன்றுக்கு ஒன்று ஆதாரம்
ஒன்றில்லாமல் ஒன்றில்லை.
அதுபோல் வாழ்க்கை தத்துவமும்
ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதாரமாய்
அன்பாய் ஆதரவாய்
இருந்துவிட்டால் வாழ்வில்
இன்பம் நிறைந்திடுமே.
இது ஒரு தொடர் வட்டம்
புரிந்துகொள்ள முடியாத
முடிவற்ற ….
புதிர் வட்டம் .

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (28-Feb-24, 7:11 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : puthir vattam
பார்வை : 42

மேலே