இயற்கை

பசுமரங்கள் பூஞ்சோலை சூழ்ந்த காடு
புதுநகரம் அமைக்க அளிக்கப் படுகிறது
ஊமையாய்க் கண்ணீர்விட்ட மரங்கள், செடிகள்
இயற்கை அன்னையின் சீற்றம்
பருவ மழை தவறியது .....மூன்று வருடங்கள்
வறண்ட பூமி....பஞ்சம் தலைத் தூக்க
மழைக்காக கோவிலில் எல்லாம் வருண வேள்வி...
மனதிற்குள் சிரித்துக் கொள்ளும் இயற்கை அன்னை...
மக்கள்.....இவர்களும் என் பிள்ளைகளே
என்று இவர்கள் என்னை அறிந்து
என்னோடு என்மீது அன்புகொண்டு உறவாடுவார்கள்...
என்று நினைத்தாளோ.....தாய் மனம் பித்து..
மழையாய்ப் பொழிகிறாள் இயற்கை...
அழுதிடும் குழந்தைக்கு தாய்ப் பால் தரும் தாயைப்போல!

காடு நம்மை வாழவைக்கும்.....பசுமரங்களும், சோலையும்
இயற்கையைப் பராமரிப்போம்
இயற்கை கடவுளாய் நமக்கு வேண்டியதை எல்லாம் தருவாள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (29-Feb-24, 12:26 pm)
Tanglish : iyarkai
பார்வை : 89

மேலே